யாழில் விடுதியொன்று முற்றுகை
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது 42 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் நேற்று (18.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியை ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நடாத்தி வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விடுதியினால் அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த இளவாலை பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.