WhatsApp Image 2024 02 26 at 13.08.57 2 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் தொடரும் கவனயீன விபத்துக்கள்

Share

யாழில் தொடரும் கவனயீன விபத்துக்கள்

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்றநிலையில் அருகில் தரித்து நின்ற வாகனத்துடன் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இதனை அவதானித்த அங்கிருந்த பொது மகனொருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

கடந்த 19 ம் திகதி அல்லைப்பிட்டியில் மூதாட்டி ஒருவரும் கடந்த 23 ம் திகதி நல்லூர் பகுதியில் இளைஞர் ஒருவரும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்தனர்.

“இவ்வாறு பேருந்து மிதிபலகையில் தொங்கியவாறு சென்று விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தால் யார் பொறுப்பு. விபத்து இடம்பெற்ற பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்காது, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறு பேருந்துகளில் தொங்கியவாறு சென்றால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள், கோரியுள்ளனர்.

மேலும், வீதிகளில் மறைந்து நின்று குற்றம் நிகழ்ந்த பின்னர் தண்டப்பணம் அறவிடும் போக்குவரத்து காவல்துறையினர், ஒழுங்காக கடமையை செய்தால் இவ்வாறு அசம்பாவிதங்கள் ஏற்படாது – என்றனர்.

அதிக பயணிகளை யார் ஏற்றுவது என்பதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இடையேயான போட்டி காரணமாக விபத்து, உயிரிழப்பு என பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுப் போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்து சாரதிகள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வதே இன்னுமொரு உயிரிழப்பை தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...