8 48
இலங்கைசெய்திகள்

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

Share

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(27.12.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இவர் கடந்த 8ஆம் திகதி மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு – ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றதுடன் அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேளை அந்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற முதியவர் மீது தாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின் பின் கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இன்று(27) காலை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1000 F 62831893 ys5pStUNE4HtH0YiblTGtnyZ9o0UO1AC transformed
இலங்கைசெய்திகள்

இயற்கைச் சீற்றத்தால் புத்தளம் உப்பளங்களில் 25,000 மெட்ரிக் டன் உப்பு சேதம்: உற்பத்தியாளர்கள் நிவாரணம் கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் புத்தளம் உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 25,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான...

images 10 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பணச் சலவை வழக்கு: முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு மீண்டும் திறந்த பிடியாணை!

பணச் சலவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றில் சந்தேக நபர்களாகப்...

1624450407 online edu 02
அரசியல்இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாடு: சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புக்குள்ளான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகக்...

check pope expresses closeness with disaster affected asian nations 69369cbe1d564 600
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவு: போப் ஆண்டவர் லியோ உறுதி!

‘தித்வா’ சூறாவளியால் (Ditwa Cyclone) பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென, பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope...