8 48
இலங்கைசெய்திகள்

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

Share

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(27.12.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இவர் கடந்த 8ஆம் திகதி மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு – ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றதுடன் அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேளை அந்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற முதியவர் மீது தாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின் பின் கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இன்று(27) காலை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...