ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை

24 6663220dd9788

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மாவத்தகம, பிலஸ்ஸ மஸ்வெவ என்ற முகவரியில் வசித்து வந்த 62 வயதுடைய மேரி ரூட் பெரேரா என்ற பெண்ணே தனது வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

2 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இத்தாலியில் வசிப்பதாகவும், அவர் சில காலம் இத்தாலியில் பணியாற்றிய பின்னர் கடந்த 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்து தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் வீட்டில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கின்றனர்.

இந்தக் கொலையில் புதையல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துறவி ஒருவருடன் வந்த பலர் புதையலிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் மாணிக்கக் கற்கள் அல்லது தங்கத் துண்டுகளை காட்டி அந்தப் பெண்ணிடம் கொடுத்து சுமார் 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் மெதிரிகிரிய பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாக தற்போது இனங்காணப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மேலதிகமாக, அந்த வீட்டில் வேலைக்காக வந்த தம்பதியர் பற்றிய தகவல்களையும் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version