இலங்கைசெய்திகள்

புலம்பெயர் உறவுகளால் வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்: ஐ. நா

Share
24 6660de86e808b
Share

புலம்பெயர் உறவுகளால் வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்: ஐ. நா

புலம்பெயர் உறவுகளால் வடக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ முடியும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

”சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது.

வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளும் போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

இதற்கமைய காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும், அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை?

மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.” என மார்க் என்ட்ரோ தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...