Untitled 1 Recovereddd scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சிறீதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ்

Share

சிறீதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறீதரன் எம்.பி. வெற்றி பெற மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சில நாட்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றார்.

கூட்டம் முடிந்ததும் அவரது அறையை நோக்கி அவர் விரைந்தார். அப்போது ஜனாதிபதியின் அறைக்கு அருகில் ஜனாதிபதியை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

சார்ள்ஸைக் கண்டதும் ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருங்காலத் தலைவர் வந்து நிற்கின்றார் என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரா? என்று கேட்டார்கள் ஜனாதிபதியுடன் வந்தவர்கள்.

“ஆம்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிறீதரன் எம்.பியின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் இவர்தானே…” என்று பதிலளித்தார் ஜனாதிபதி. அப்படியே சார்ள்ஸ் நிர்மலநாதனை அறைக்குள் அழைத்துச் சென்று உரையாயாடினார் ஜனாதிபதி.

வடக்கின் அபிவிருத்திக்குப் புலம்பெயர் தமிழர்களை உதவச் சொல்லுங்கள் என்று சார்ள்ஸ் எம்.பியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...