சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

tamilni 261

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடுமையான வட்டி விகிதங்களின் உயர்வு பின்னர், உலகப் பொருளாதாரம் மெதுவாக இறங்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்கள் ஆண்டின் நடுப்பகுதியில் குறையத் தொடங்கும் என்று நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களில் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர், “நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த மென்மையான இறங்குதலுக்கு உலகப் பொருளாதாரம் இப்போது தயாராக உள்ளது என்று துபாயில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா போன்ற முன்னணி பொருளாதாரங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நீடிக்கும் போர் உலகப் பொருளாதாரங்களை பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை தொடர்ந்தால் அது ஒட்டுமொத்த உலகிற்கும் மிகவும் சிக்கலாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

Exit mobile version