குறைக்கப்படும் தனிமைப்படுத்தல் காலம்!!

FB IMG 1618810800622

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.எனினும் தற்போது தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் ஐந்து நாட்களே கடுமையானதாக இருக்கும், அடுத்து வரும் இரண்டு நாட்கள் சாதாரணமாக இருப்பதுடன், அதன் பின் அவர்கள் வேலைக்கு செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

 

Exit mobile version