நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்

rtjy 48

நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்

நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இம்மாத நடுப்பகுதியில் இருந்து இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மின் கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு, அடுத்த ஆண்டு முதல் வற் வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுகாதார சேவை குறைபாடுகள், ஆசிரியர் சேவைகளில் சிக்கல்கள், அரசு நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி இந்த தொடர் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முழுமையான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என புலனாய்வு அமைப்புகளின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version