யாழ். தக்சியை பார்த்து வியந்த செவ்வந்தி : வெளிவரும் பல தகவல்கள்!

8 17

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த பெண்ணான நந்தகுமாரன் தக்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்ததாக கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிசாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை வானொலியின் இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

செவ்வந்தி நேபாளத்திற்கு செல்லும் வரை தக்சியை தெரியாதாம். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேபாளத்தில் பிரிந்து வசித்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் இருப்பிடங்களை தெரிவித்துக் கொள்ளவில்லை.

ஆறு அல்லது ஏழு நாட்கள்  தொடருந்துகள், பேருந்துகள் மற்றும் கார்களில் செவ்வந்தியை அழைத்துச் சென்ற ஒரு இந்திய தரகரால் ஜூன் மாதம் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேபாள எல்லையில் தரகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்படும் வரை இஷாரா செவ்வந்தி நேபாளத்திலேயே இருந்துள்ளார்.

அங்கு தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், பணம் உட்பட அனைத்தும் துபாயில் இருந்த ஜே.கே.பாயால் வழங்கப்பட்டுள்ளன.

அவரது நலனை விசாரிக்க அவர் அவ்வப்போது துபாயிலிருந்து நேபாளத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜே.கே. பாயின் வேண்டுகோளின் பேரில் கே. சிவதாசன் செவ்வந்தி ஒரு மீன்பிடி படகில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் செவ்வந்தி தனது உடல் அழகு மற்றும் முகத்தை பொலிவாக வைத்திருக்க அழகுக்கலை நிலையங்களுக்கு அதிகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version