அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதி அமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
பெண் என்ற வகையில் இஷாராவின் அறிவாற்றல் வியப்பிற்குரியது என அவர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிகந்த நவசேனபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
போதையற்ற நாடு அழகிய வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குற்றச்செயல் ஒன்று பின்னணியில் பெண் என்ற வகையில் இஷாரா பயணம் செய்த பாதை அவர் எவ்வளவு அறிவாற்றல் கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
அவரது இந்த ஆற்றல்களை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்க பெறும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே நாம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன என பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.