7 16
இலங்கைசெய்திகள்

செவ்வந்திக்கு ஊடகங்கள் வழங்கிய பிரபலம்: கடுமையாக விமர்சித்த பேராசிரியர்

Share

இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் (Mayura Samarakoon) கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு இது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது பதிவில்,

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன.

ஒவ்வொரு மணி நேரமும் (breaking news) அறிவிப்பு செய்தது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என பல செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.

இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளார். ஆனால் ஸ்பாவில் வேலை செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டால் உரையாடும் பாணி கீழ்த்தரமானதாக இருக்கும்.

நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96ல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...

FB IMG 1764904684113 large
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சமா? உள்நாட்டுப் பகுதிகளுக்கு உதவிகள் தாமதம் – மக்கள் வேதனை!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள்...

images 10 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இடி மின்னலுடன் கனமழை: வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது!

கொழும்பில் இன்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டிப் பெய்கிறது. சுமார் அரை...

articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல்...