இலங்கையில் மின்நெருக்கடி இல்லையா?

10 powerpaucity 1 1560950154

தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல, எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இதுவென ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இருப்புகளை முறையாக பராமரிக்காததாலும், 70% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாலும் மின் நெருக்கடி தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து, இ.மி.சபை வருடாந்த உற்பத்தி சுழற்சியைப் பொருட்படுத்தாமல் நீர் மின்சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

இதன் காரணமாக நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் மீண்டும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே நிலை நீடித்தால் வரும் திங்கட்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 4 மணி நேரம் மின் வெட்டு ஏற்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

#SrilankaNews

 

Exit mobile version