ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க அழைப்பு

24 665d4628786ef

ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க அழைப்பு

ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பாளர் முஹம்மது ஒபைட் அல்-மசூதி (Mohammed Obaid Jabur Al-Masoudi) இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் ( Nalin Fernando) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ஈராக்கில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், விசா பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இந்த தூதரகம் மூலம் செயற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version