ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

24 664bec85e4c28

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அவர் இவ்வாறு உலோகத்திலான பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் இந்தப் பரிசுப் பொருள் அமைச்சர் அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஈரான் ஜனாதிபதி உமாஓயா திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கை விஜயம் செய்திருந்தார்.

இதன் போது ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அமரவீர ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் பின்னர் இந்த விசேட பரிசுபொருளை அமரர் ரைசீ இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் இந்த பரிசுப்பொருள் மஹிந்த அமரவீரவிற்கு வழங்கப்பட்டது.

Exit mobile version