tamilni 447 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸாரை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்: கடும் தொனியில் டிரான்

Share

பொலிஸாரை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்: கடும் தொனியில் டிரான்

பொலிஸ் சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேச சமூக பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்,

”கடுமையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும், ஜனாதிபதி எனக்கு பலத்தை வழங்கியதால் தான் இவ்வாறு கூறுகின்றேன்.

யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்து, நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன். சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர்.

இதன்காரணமாக அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர். யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம்.

மேலும், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை.பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.

அத்தோடு பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் நாட்டில் வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை” என்றார்.

Share
தொடர்புடையது
03 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகம்: இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த அண்டை நாடுகள்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், இலங்கை,...

02 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....

30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...