அரசின் கொடூரங்களுக்கு சர்வதேச நீதியே வேண்டும் – கஜேந்திரன்

tamilni 214

தமிழ் மக்களை இலக்கு வைத்து அரசு நிகழ்த்திய கொடூரங்களுக்குச் சர்வதேச நீதி கட்டாயம் வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டில் 70 வருடங்களாக இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி எல்லா விடயங்களையும் மறைக்க முடியாது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த உண்மை ஏற்கப்பட்டு ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். ஒற்றையாட்சி முறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

அதன்மூலமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version