27 6
இலங்கைசெய்திகள்

தராகி சிவராமின் மரணம் உட்பட்ட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பம்

Share

தராகி சிவராமின் மரணம் உட்பட்ட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம், 2006 இல் கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம்,  தொடர்பான விசாரணைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மாத்தறை வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...