சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்

சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்

சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்

கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் ஊசிகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் திகதி கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நுண்ணுயிர் ஊசி செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்னர், அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சர்ச்சைக்குரிய ஊசி இந்த நபருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

Exit mobile version