கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுதாரியின் மனைவி, சாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தீனி மகேந்திரனின் மரணம் குறித்து சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அரசஆய்வறிக்கை அதற்கு முன்னதான அறிக்கைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தாக்கதல்களுக்கு பின்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் பாதுகாப்பான வீடொன்றில் தற்கொலைக்குண்டு வெடிப்பில் சாரா ஜஸ்மின் உயிரிழந்தார் என டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரச ஆராய்ச்சி திணைக்களம் டிஎன்ஏ ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
#srilankaNews