25 679df8be8f807
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு: பெருந்தோட்ட சமூக நலன் குறித்து பேச்சு!

Share

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் அவர்கள், பெருந்தோட்ட சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்:

இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குவதுபோல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட சமூகத்தினர் OCI அட்டையைப் பெற்றுக் கொள்வதில் கடினமான வழிமுறைகள் இருப்பதால் அதைப் படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்காக, பிறப்புச் சான்றிதழில் ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ எனக் குறிப்பிடுவதன் மூலமாகவோ, அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மாணவர்களுக்கான 2,500 ரூபாய் புலமைப்பரிசிலின் தொகையை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...