இலங்கையில் புதிய தலைமைத்துவ வர்க்கத்திற்கு மால்கம் ரஞ்சித் அழைப்பு
தேசத்தை ஒப்படைக்கும் அளவுக்கு தைரியம் ஏற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (04.02.2024) நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“தற்போதைய தலைமைத்துவ வர்க்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்கள் நலனைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே நினைத்தனர்.
எனவே இந்த தலைமைத்துவத்தை அகற்றி புதிய தலைமைத்துவ வர்க்கத்தை கொண்டு வருவது அவசியம்.
இலங்கைத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் மாத்திரமே சில பிரிவு மக்களைப் பயன்படுத்தினர்.
எனினும் சிங்கப்பூர் தலைவர்கள், சீனர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் மலாய் மக்களை ஒன்றிணைத்தனர்” என்று கூறியுள்ளார்.