tamilni 50 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்டுள்ள கறுப்புக்கொடி

Share

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்டுள்ள கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.2.2024) நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத் தீயிலிருந்து தமிழர் தாயகத்தைக் காத்திடவும் தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்புக்காகவும் இன்று (04) கிளிநொச்சி, இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள அனைவரையும் உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம் என்று யாழ். பல்கலைக்கழக ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாக பிரகடனப்படுத்தி கறுப்புக்கொடி கொடிகள் பறக்கவிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...