அதிகரிக்கப்படும் சமுர்த்தி பயனாளிகள் கொடுப்பனவு!!

samurdhi

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நாளை (14) முதல் 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபாய் மேலதிக கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான கொடுப்பனவு 4, 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுவரையில் 2, 500 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொண்ட குடும்பமொன்றுக்கு 3,200 மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் 1,500 ரூபாய் பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

 

Exit mobile version