tamilni 315 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

Share

இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

திருமணங்கள் உள்ளிட்ட வைபவங்களை நடத்தும் விழா மண்டபங்களுக்கான முற்பதிவு கட்டணங்களை அதிகரிக்க இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் முற்பதிவுகளுக்கான கட்டணத்தை வீதத்தால் அதிகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் 50 வீதத்தால் குறைவடைந்து செல்லும் நிலையே காணப்படுகிறது.

மரக்கறிகள் மாத்திரமின்றி அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதால், நட்டத்தை ஈடு செய்ய முடியாத நிலைமையே விழா மண்டப உரிமையாளர்களுக்கு உள்ளனர்.

திருமண மண்டபங்கள், விழாக்களுக்கான மண்டபங்கள் என்பனவற்றுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் தமது தொழில்சார் உறுப்பினர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையை கருத்திற்கொண்டு முற்பதிவுகளுக்கான கட்டணங்களை 10% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...