மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை!

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை!

கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுவரி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கால எல்லைக்குள் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்தத் தவறினால் உரிமம் இடைநிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் உள்ள ஒன்பது முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 6.2 பில்லியன் ரூபா பாரிய வரி நிலுவையை செலுத்தத் தவறினால் அவற்றின் உரிமம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் உரிய வரிகளை வசூலிக்கவில்லை என்ற தொடர்ச்சியான விமர்சனங்களால், மதுவரி திணைக்களம் மதுபான உற்பத்தியாளர்களுக்கு 14 நாள் கெடு விதித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மொத்த நிலுவைத் தொகையான 6.2 பில்லியனில், 2.5 பில்லியன் வரி நிலுவையாகவும் மீதி 3.8 பில்லியன் தாமதமாக செலுத்தும் கட்டணமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Exit mobile version