tamilnaadi 97 scaled
இலங்கைசெய்திகள்

தொடருந்து சேவைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Share

தொடருந்து சேவைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் தொடருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கரையோர தொடருந்து வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (09), நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படுமென என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர வீதியில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...