24 66370b200e531
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே நடைபெறவுள்ள உரையாடல்

Share

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே நடைபெறவுள்ள உரையாடல்

இலங்கைக்கும் (Sri Lanka) ஐக்கிய இராச்சியத்திற்கும் (United Kingdom) இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் (Colombo) இடம்பெற உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான குறித்த சந்திப்பானது நாளை மறுதினம் மே 07ஆம் திகதி (07.05.2024) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடம்பெயர்வு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் உட்பட சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளது.

மேலும், இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் 2023இல் தமது 75 வருட இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடியுள்ளன.

இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது மூலோபாய உரையாடலில், வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பணிப்பாளர் நாயகம் சோபினி குணசேகர (Shobini Gunasekera) தலைமையில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான (Aruni Wijewardane) இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் உள்ளடங்கும்.

ஐக்கிய இராச்சியத்தின் குழுவுக்கு இந்தியப் பெருங்கடல் இயக்கு நகரம் மற்றும் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தலைமையாளர் பென் மெல்லர் (Ben Meller) தலைமை தாங்க உள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...