மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு 31 ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், தொற்று பரவும் அபாயம் குறையவில்லை என்பதால் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#SrilnkaNews
Leave a comment