வடக்கு தொடருந்து போக்குவரத்து பாதிப்பு

24 664d576556573

வடக்கு தொடருந்து போக்குவரத்து பாதிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொத்துஹெர (Potuhera) மற்றும் பொல்கஹவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதன் காரணமானவே இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (Sri Lanka Railways) அறிவித்துள்ளது.

குருநாகலிலிருந்து (Kurunegala) கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக தொடருந்து ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (SL Railways) தெரிவித்துள்ளது.

Exit mobile version