tamilni 98 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி தடை நீக்கம்: நிதி அமைச்சு

Share

இறக்குமதி தடை நீக்கம்: நிதி அமைச்சு

பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகனங்கள் தவிர்ந்த அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...