tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

இலங்கையிடம் ஐஎம்எப் முன்வைத்துள்ள கோரிக்கை

அடுத்த வருடம் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இதன்படி இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயம் நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழுத்தலைவர் பீட்டர் ப்ரூயர் மேற்படி வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்வுக்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும், சீனாவின் வங்கியுடனும் கொள்கை ரீதியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், வணிகக் கடன் வழங்குநர்கள் அல்லது பத்திரதாரர்களுடன் இன்னும் இலங்கை ஒப்பந்தம் செய்யவில்லை.

முன்னதாக பத்திரதாரர்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆரம்ப முன்மொழிவு இலங்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...