இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு!

24 6700f1819bcb5
Share

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பாகது பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பேணுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க, தென்கிழக்காசிய மற்றும் மத்திய பொருளாதார விவகாரங்கள் (இருதரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...