துறைமுக நகருக்கான வரிச்சலுகை: சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம்..!

20 22

துறைமுக நகருக்காக வரிச்சலுகைகளை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுக நகரில் (போர்ட்சிட்டி) முதலீடு செய்வோருக்கு தீர்வை வரி மற்றும் சுங்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறு வரிவிலக்கு அளிப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருமானத்தை ஈட்டிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கான வரிச்சலுகையை ரத்துச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்கான எதிர்கால முதலீட்டாளர்களைத் தேடிக் கொள்வதில் அரசாங்கத்துக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version