இலங்கையின் வரவு செலவு திட்டத்தை உற்று நோக்கும் ஐ.எம்.எப்
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டமானது, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எனினும் அந்தச் சலுகைகள் அனைத்தும் தங்கள் நிதியத்தாலும் இலங்கை அரசாங்கத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டத்தின் அளவுருக்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் ஏதேனும் மானியம், சம்பள உயர்வு போ ன்றவற்றைச் செலவிட்டால், அந்தத் தொகையை வருவாய்க்கு ஏற்றால்போல் நடைபெற வேண்டும் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அளவுருக்களுக்குள் வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறதா என்பதை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையை வெளியிடுவதற்கான ஒப்புதலுக்காக நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.