9 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ள இலங்கை

https cdn.cnn .com cnnnext dam assets 220901004927 01 hfr gotabaya rajapaksa return sri lanka

கோட்டாபய ராஜபக்சவின் இரண்டரை வருட கால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வொன்றின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

முலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும்.

ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். 2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version