abb 1681149237836 1681149244130 1681149244130
இலங்கைசெய்திகள்

நான் இறக்கவில்லை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஹமீத்

Share

நான் இறக்கவில்லை.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஊடகவியலாளர் அப்துல் ஹமீத்

நான் இறக்கவில்லை. ஒரு செய்தியை தீர விசாரித்து பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது என தான் மரணித்து விட்டதாக பரவிய வதந்திகள் குறித்து பிரபல ஊடகவியலாளர் பி. எச். அப்துல் ஹமீத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட காணொளியிலேயே இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாண்டவன் மீண்டுவந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். நேற்று இரவு இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை.

அந்த விஷம செய்தியை கேட்டு ஆயிரம், பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலை கேட்ட பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்தி கொண்டார்கள்.

சிலர் என் குரலை கேட்டதும் கதறி அழுததை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. இத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்து கொண்டேன்.

செத்து பிழைப்பது என்பது எனக்கு மூன்றாவது அனுபவம் என பதிவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...