நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள்

10 4

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி தொடக்கம் சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் பொதுமக்களுக்கும் கணிசமான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பலனாக கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 330க்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள் நாடு முழுவதிலும் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றில் வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மட்டுமன்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் உள்ளடங்கியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version