tamilni 12 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் தடையுத்தரவை மீறி விகாரை

Share

திருகோணமலையில் தடையுத்தரவை மீறி விகாரை

திருகோணமலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலுப்பைக்குளம் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களில் காலாகாலமாக தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...