17 16
இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தோருக்கு ஏற்பட்டுள்ள அபாயம்

Share

சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தோருக்கு ஏற்பட்டுள்ள அபாயம்

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது.

இவ்வாறு சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக விசேட அரசாங்க நிறுவனமொன்று நிறுவப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்களை மீளமைக்கும் நிறுவனம் என்ற பெயரில் புதிய நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டிய வருமானங்கள், நிதிச் சலவையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானங்கள், வேறும் வகையிலான சொத்துக்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ காணப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அரசாங்கத்திற்கு கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் இரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...