7 20
இலங்கைசெய்திகள்

ஹரி ஆனந்தசங்கரிக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து

Share

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உலகலாவிய ரீதியாக தமிழர்கள் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக தமது தடத்தினை ஆழமாகப் பதித்துள்ளனர்.

அரசியல், வைத்தியத்துறை, விளையாட்டுத்துறை, விஞ்ஞானம் மற்றும் சினிமாத்துறை எனத் தமிழர்கள் கால்த்தடம் பதிக்காத துறைகள் இல்லை.

அந்தவகையில் தான் எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் எம்மில் ஒருவர் கனேடிய மக்களாலும் – அரசாங்கத்தாலும் மதிக்கப்பட்டு இன்று மிக முக்கியமான பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன, மத, நிற பேதங்களைக் கடந்து ஒரு தமிழரை அந்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் ஏற்றுக்கொள்வதென்பதும் – அதற்கு மேலாக அந்த நாட்டின் அரசு அவருக்கு மிகப் பெரிய பதவியை வழங்குவதென்பதும் அவருடைய திறமைக்கும் – நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையும் கூட. கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைக் கடந்த காலங்களில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன்.

சட்ட வல்லுநரும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அவருக்கு மிகப் பொருத்தமான பதவியை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதனூடாக அந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படுவதுடன் – விசேடமாகக் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் புத்துணர்வினைக் கொடுப்பதாக இந்தப் பதவிப்பிரமாணம் அமைந்துள்ளது” என்றுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...