7 20
இலங்கைசெய்திகள்

ஹரி ஆனந்தசங்கரிக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து

Share

கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உலகலாவிய ரீதியாக தமிழர்கள் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக தமது தடத்தினை ஆழமாகப் பதித்துள்ளனர்.

அரசியல், வைத்தியத்துறை, விளையாட்டுத்துறை, விஞ்ஞானம் மற்றும் சினிமாத்துறை எனத் தமிழர்கள் கால்த்தடம் பதிக்காத துறைகள் இல்லை.

அந்தவகையில் தான் எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் எம்மில் ஒருவர் கனேடிய மக்களாலும் – அரசாங்கத்தாலும் மதிக்கப்பட்டு இன்று மிக முக்கியமான பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன, மத, நிற பேதங்களைக் கடந்து ஒரு தமிழரை அந்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் ஏற்றுக்கொள்வதென்பதும் – அதற்கு மேலாக அந்த நாட்டின் அரசு அவருக்கு மிகப் பெரிய பதவியை வழங்குவதென்பதும் அவருடைய திறமைக்கும் – நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையும் கூட. கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைக் கடந்த காலங்களில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன்.

சட்ட வல்லுநரும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அவருக்கு மிகப் பொருத்தமான பதவியை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதனூடாக அந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படுவதுடன் – விசேடமாகக் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குப் புத்துணர்வினைக் கொடுப்பதாக இந்தப் பதவிப்பிரமாணம் அமைந்துள்ளது” என்றுள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...