கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை

tamilni 268

இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பை அடுத்து யாழ். மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Exit mobile version