தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க என்றழைக்கப்படும் ‘புவக்தண்டாவே சனா’ ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினராவார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடத்திய ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
அண்மையில் பிடிக்கப்பட்ட போதை பொருட்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்டது என நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் இறுதி கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி முதல் அனைவரும் சனத் வீரசிங்க என்றழைக்கப்படும் ‘புவக்தண்டாவே சனா’வின் வீட்டில் இரவு போசனத்தை எடுத்துள்ளனர்.
‘புவக்தண்டாவே சனா’ ஏற்கனவே ஐஸ் போதை பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஜே.வி.பியினர் பொலிஸாருக்கு கொடுத்த அழுத்தத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இறுதியில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை ஐஸ் போதை பொருட்கள் இவருக்கு சொந்தமான இயந்திர படகிலேயே கொண்டுவரப்பட்டதாக சாட்சிகள் கிடைத்துள்ளதால் பொலிஸாரால் கைது செய்யவேண்டியுள்ளது.
‘புவக்தண்டாவே சனா’ ஜே.வி.பியின் பிரபல உறுப்பினராவார்.கட்சிக்கு பெருவாரியாக செலவு செய்பவர் என்பதோடு நெருக்கமானவராவார்.
இவர் கிளப் வசந்த கொலைக்கு பயன்படுத்திய வானை உருவாக்கியவர் எனவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
‘புவக்தண்டாவே சனா’ டுபாயில் இருக்கும் உனாகூருவே சாந்தவின் நண்பராவார்.உனாகூருவே சாந்த இவருக்கு பெரும் தொகை பணம் அனுப்புகிறார்.இதனால் இவர் கடந்த காலங்களில் ஜே.வி.பிக்கு பெருவாரியாக செலவு செய்துள்ளார்.
அதனாலே அவர் கைது செய்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.போதை பொருட்கள் கொண்டு வருவதும் அரசாங்கம், அதை பிடிப்பதும் அரசாங்கம் என்பதாகவே தோன்றுகிறது.
தென்பகுதிக்கு ஜே.வி.பி தலைவர்கள் செல்லும் போது பகல்-இரவு சாப்பாட்டை வழங்குவது இவர்தான் என குறிப்பிட்டுள்ளார்.