rtjy 187 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள்

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு நான் தயார் என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21.09.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினதாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றுமுன்தினம் (19.09.2023) தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் அதன்போது தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது கருத்துரைத்த அவர், “2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாதுள்ளமை கவலையளிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிலர் தடையாக இருந்துள்ளனர்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பில் இந்தத் தாக்குதல் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்” – என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தினார்.

இதனிடையே குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...