25 684703d9b6f1e
இலங்கைசெய்திகள்

கொள்கலன் விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் துப்பாக்கிச் சூடுகள் அதகிரிப்பு – உதய கம்மன்பில

Share

அண்மையில் பரிசோதனை இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகளிவல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த கொள்கலன்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கலன்களை அனுப்பியது யார், எந்த நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது, இந்த கொள்கலன்களில் காணப்பட்ட பொருட்கள் என்ன என்பது பற்றிய பல்வேறு விடயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் 270 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறினாலும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த கொள்கலன்களை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் அனுப்பியவர்கள் இதற்கு முன்னர் இறக்குமதிகளின் போது தவறிழைத்தவர்களா என கேள்வி எழுப்பி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தமக்கு பதில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன் குறித்து ஆய்வு செய்த குழுவின் தலைவரும், சுங்கத் திணைகள மேலதிக பணிப்பாளருமான சீவலி அருகொட நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதாகவும் அவர் பெல்ஜியத்தில் ஒர் தொழிலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்று தொடர்புடையவர்கள் வெளிநாடு சென்றால் அவர்களை சட்டத்தின் முனு; நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

சுங்க சட்டங்களை மீறி அமைச்சர் செயற்பட்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் துறைமுகத்திலிருந்து சிகப்பு லேபல் இடப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த கொள்கலன்கள் விடுவிப்பதற்கே துறைமுக அமைச்சருக்கும் சுங்கப் பிரிவு பொறுப்பான நிதி அமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது, இவ்வாறான ஓர் பின்னணியில் போக்குவரத்து அமைச்சர் இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு எவ்வாறு உத்தரவிட்டார் என உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பிலான மூன்று மணித்தியாளங்கள் வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் பதினெட்டாம் திகதிகளில் சிகப்பு மற்றும் மஞ்சள் லேபல் இடப்பட்ட பெருந்தொகையான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட கொள்கலன்களை விடுவிக்கும் நோக்கில் கடந்த டிசம்பர் மாதம் முதல் துறைமுகத்தில் கடுமையான கொள்கலன் நெரிசல் ஒன்றை செயற்கையாக ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருக்கவில்லை என சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரும், பாதுகாப்புச் செயலாளரும் எவ்வாறு கூறுகின்றார்கள் எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்ப்டாத கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...