1755693983076533 0
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு ஐஸ் போதைப்பொருள் வழக்கு: முன்னாள் மேயரின் கணவர், பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்!

Share

மட்டக்களப்பு நகரில் ஐஸ் (ICE) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் (சி. சந்திரகாந்தன்) மொழிபெயர்ப்பாளருமான நபரை, பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஊழல் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

அங்கு ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் மொழிபெயர்ப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவருமான நபர் 5 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கூழாவடிப் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு நபர் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சனிக்கிழமை (நவம்பர் 8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னாள் முதல்வரின் கணவரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சுத் தொழிலாளி பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...

25 690c62aa700e2
செய்திகள்இலங்கை

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர் 2 கிலோ ஹெரோயினுடன் கைது: நவம்பர் 26 வரை விளக்கமறியலில் நீதிமன்று உத்தரவு!

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர், சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

selvam adaikalanathan 8
செய்திகள்அரசியல்இலங்கை

வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் மோசமான செயலால் – செல்வம் அடைக்கலநாதன்!

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் (பாதீடு) சிறப்பானது என்று தாம் கூறியது தவறு என்பதைத் தற்போது...

28120819 14
இலங்கைசெய்திகள்

வீதி விளக்குக் கட்டணம்: கொழும்பு உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியுள்ளன – எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி!

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள், வீதி விளக்குகளுக்கான மின்சாரக்...