வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் மனிதப் புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், திருக்கேஸ்வரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் ‘கார்பன் டேட்டிங்’ சோதனைகளுக்காக ‘புளோரிடா’விற்கு அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
தனியார்