25,000 ரூபா நிவாரணம் தனி நபருக்கா, வீட்டுக்கா? சண்டிப்பாய் செயலாளரிடம் ஆணைக்குழு விளக்கம் கோரல்!

25 69341eed5a1e9

அரசாங்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரூ. 25,000 கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்கிய தமது வீட்டைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறி, ஒரு மாணவன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

மாணவனின் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், நிவாரணத் திட்டம் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை வழங்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் ரூ. 25,000 நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனி நபருக்கானதா ?

இந்த விளக்கத்தை இரண்டு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version